Aug 8th, 2010
நல்வரவு….
வணக்கம் நண்பர்களே…
கிராமம் கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி நிறுவனம் (reaad.org – N.G.O) வேளாண் மக்களுக்கு உதவி பல்வேறு வகையிலும் ஊடகம் சார்ந்த தகவல் பரிமாற்றங்களை அளித்து வருகிறது, இந்நிறுவனம் மற்றும் விவசாயத் தகவல் ஊடகம் இணைந்து வேளாண்மை சார்ந்த ஆலோசனை மற்றும் வேளாண் வணிக உதவி மையத்தினை ஆரம்பிக்க உள்ளது. இந்த உதவி மையத்தில் தொலைப்பேசி வாயிலாக வேளாண் சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் பதில்களைப் பெற முடியும். மேலும் வேளாண் மக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்திடவும், வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிடவும் தகவல் பரிமாற்றங்கள் தொலைப்பேசி வாயிலாக பெற முடியும். மேலும் அரசு அளிக்கும் மானியங்கள் உதவிகள் குறித்து அனைத்து வேளாண் மக்களும் அறிந்து கொள்ளவும் பயன்பெறவும் தகவல் அளிக்கப்படும். ஒருவர் தனது மொபைல் எண்ணைப் பதிவு செய்து
கொண்டால் போதும் அவர் விருப்பப்படும் இது போன்ற தகவல்கள் குறுந்தகவல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த சேவைகள் முற்றிலும் இலவசமே.
இந்த சேவையின் மூலம் வேளாண் மக்களுக்கான தகவல் பரிமாற்றத்தில் நாங்கள் மேலும் ஒரு புதிய மாற்றாத்தினை உருவாக்கிட முனைகிறோம். இந்த இலவச சேவையின் மூலம் வேளாண் பெருமக்கள் பயன்பெற உங்களை சார்ந்த வேளாண் மக்களுக்கு இது குறித்து சொல்லுங்கள்…
நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
இந்த சேவைகள் சிறப்பாக செயல்பட உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கிராமக் கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி நிறுவனம் உங்களை அன்போடு அழைக்கிறது.
உங்களின் உதவி அறிவு சார்ந்த வேளாண் சமூகத்தினை உருவாக்க உதவும்.
நமது இந்த சேவையினை சிறப்பாக அளித்திட முனைந்து வருகிறோம்.
எம் திட்டங்கள் எமக்கு ஆனது அல்ல…
உங்களுக்கானதும் அல்ல…
இது நமக்கானது…..
அறிவு சார்ந்த வேளாண் சமூகம் காண்போம்….
மேலும் விபரங்களுக்கு,….
கிராமக் கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி நிறுவனம்( NGO)
விவசாயத் தகவல் ஊடகம்,
2/185 பட்டிமணியகாரன்பாளையம்,
கோபிசேட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம்…..
அழைக்க.. +91 7 708 709 710
வேளாண் மக்களுக்கான சுதந்திரம் காண தளம் அமைப்போம்…
என்று ஒரு நாள் விவசாயி தன் உழைப்புக்கு ஏற்ற வருமான பெறுகிறானோ அன்றே…
இந்த விவசாய நாட்டின் முழுமையான சுதந்திர நாள்.. அன்று நாடும் உணவில் தன்னிறைவு அடையும்…..
அறிவு சார்ந்த வேளாண் சமூகத்தினை நோக்கி….
